top of page

கம்ப இராமாயணம் - எளிய உரை- பகுதி- 1


வணக்கம் அன்பு நண்பர்களே !!! இந்த பதிவு வரிசையில் கம்ப இராமாயணம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உரை செய்யலாம் என்றிருக்கிறேன்.




தான் வான்மீக இராமாயணத்தை தமிழில் எழுத வந்ததை , பாற்க்கடலை பூனை நக்கி குடிப்பதை போல் என்கிறான் கம்பன். எனில் என இந்த முயற்சியை என சொல்ல? அந்த இரமானே கதி என்று இம்முயற்சியை துவங்குகிறேன்.



கடவுள் வாழ்த்து 

 


மூலம் 

உரை

01

உலகம் யாவையும்

தாம் உளவாக்கலும்,

நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

அண்ட சாராசரம் -  எங்கும் நிறை பொருளே! -

படைப்பும், நிலைப்பும் அழிப்பும் – அழிவிலா  நின் நாடகமே !

நினக்கே  நம் சரண் !

02

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை

எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்

முற் குணத்தவரே முதலோர்; அவர்

நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ.

இறையின் பண்பினை யான் சொலல்லாகுமோ ! மேற்குண பெரியவர் வாய்மொழிக்கடல்தன்னில் -திளைதல் மேல் அன்றோ !

03

ஆதி, அந்தம், அரி என, யாவையும்

ஓதினார், அலகு இல்லன, உள்ளன,

வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்

பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 

வேதியர், ஞானியர், உணர்ந்தவர், துறந்தவர்– என இவ் யாவரும்– பற்றுவது - பற்றிலான் பாதம் ஒன்றையே !



அன்புடன்,



25 views0 comments
bottom of page