பகுததறிவு பற்றி சில சிந்தனைகள் . பகுத்தறிவு என்பது தமிழ் சமூகத்தால் பெரிதும் போற்ற பட்ட பண்பு என்றால் அது மிகையாகாது. ஆனாலும் தர்க்கால புரிதலில் சில குழப்பங்கள் தெரிகின்றன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய நம் புரிதலானது பகுத்தறிவு எனின் கடவுள் மறுப்பே. மூட நம்பிக்கை மறுப்பே. பல நேரங்களில் நாம் கடவுளையே மூட நம்பிக்கை என கொள்கிறோம். ஆனால் தமிழ் சமூகத்தின் புரிதல் இதுவன்று.
எந்த ஒரு விஷயத்தையும் தீர பல கோணங்களில் ஆராய்ந்து அறிதலே பகுத்தறிவென நம் முனனோர்கள் கருதினர்.
பொய்யில் புலவன் இதற்க்கு நல்லதொரு குறள் பகர்கிறான்:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. - அறிவுடமை அதிகாரம் , குறள் 423
இவ்விடம் அறிவு என்னும் சொல்லால் சுட்டப்படுவது பகுத்தறிவின்றி வேறில்லை . அதாவது பகுத்தறிவுடய ஒருவன் தான் கேட்ட எந்த ஒரு விஷயத்தையுமே தீர ஆய்ந்தே ஏற்ப்பான்.
இவ்வாறு செய்வதன் மூலம் அவன் சிறந்த தேனை ஒரு தேனி பல மலர்களிலிருந்து சேகரித்து எப்படி தன் கூட்டில் வைக்குமோ, அப்பிடியே அவன் அறிவும் இருக்கும். எடுப்பார் கைபிள்ளையாக ஒரு நாளும் இரான்.
இதை நாம் சரியாக புரிந்து கொண்டால், ஏமாற்றம் தவிர்க்கலாம். ஆப்படியெனில் கடவுள் பக்தியின்மையை எப்படி குறிப்பது? அதை இன்னொரு பதிவில் காண்போம்.
அன்புடன்,
Comentarios