வணக்கம் அன்பு நண்பர்களே !!! இந்த பதிவு வரிசையில் கம்ப இராமாயணம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உரை செய்யலாம் என்றிருக்கிறேன்.
தான் வான்மீக இராமாயணத்தை தமிழில் எழுத வந்ததை , பாற்க்கடலை பூனை நக்கி குடிப்பதை போல் என்கிறான் கம்பன். எனில் என இந்த முயற்சியை என சொல்ல? அந்த இரமானே கதி என்று இம்முயற்சியை துவங்குகிறேன்.
கடவுள் வாழ்த்து
மூலம் | உரை | |
01 | உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார் - அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே | அண்ட சாராசரம் - எங்கும் நிறை பொருளே! - படைப்பும், நிலைப்பும் அழிப்பும் – அழிவிலா நின் நாடகமே ! நினக்கே நம் சரண் ! |
02 | சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள் முற் குணத்தவரே முதலோர்; அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. | இறையின் பண்பினை யான் சொலல்லாகுமோ ! மேற்குண பெரியவர் வாய்மொழிக்கடல்தன்னில் -திளைதல் மேல் அன்றோ ! |
03 | ஆதி, அந்தம், அரி என, யாவையும் ஓதினார், அலகு இல்லன, உள்ளன, வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன் பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். | வேதியர், ஞானியர், உணர்ந்தவர், துறந்தவர்– என இவ் யாவரும்– பற்றுவது - பற்றிலான் பாதம் ஒன்றையே ! |
அன்புடன்,
Comments